×

அரசு கலை கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வில் 191 மாணவர்கள் தேர்வு

திருத்தணி: அரசு கலை கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வில், 686 இடங்களில், 191 மாணவர், மாணவியர் மட்டுமே சேர்ந்து உள்ளனர் என கல்லூரி முதல்வர் தெவித்துள்ளார். திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை முதலாண்டில் சேர மொத்தம், 2331 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். முதல்கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி கடந்த மாதம், 26ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. இதில், கட்ஆப், 300 மதிப்பெண்கள் மேல் எடுத்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இந்த நடப்பாண்டில், பி.ஏ. பி.எஸ்.சி.  பி.காம், பி.பி.ஏ. மற்றும்  சி.எஸ். போன்ற துறைகளில் மொத்தம், 686 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

முதல்கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவடைந்த நிலையில், 191 மாணவர்கள் மட்டுமே கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். இது குறித்து திருத்தணிஅரசு கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி கூறுகையில், முதல்கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. இனசுழற்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில், 191 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும்,13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி நடக்க உள்ளது . இதில், ‘கட்ஆப்’251 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் பங்கேற்கலாம். இதிலும், காலியிடங்கள் இருந்தால் 3ம் கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறினார்.


Tags : Government Arts College , 191 students selected in first phase consultation in Government Arts College
× RELATED 100 % வாக்களிப்பு கோரி மனித சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு