வேலூர் மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த 4 ஊராட்சி செயலாளர்கள் டிஸ்மிஸ்

வேலூர்: அதிமுக ஆட்சியில் ஊராட்சி செயலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி மருத்துவ படிப்பு சான்றிதழ் கொடுத்து, கொரோனா தடுப்பு பணிக்கான 2ம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியில் பலர் சேர்ந்தது தெரியவந்தது. இதேபோல் வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களுக்கு கடந்தாண்டு அவசரமாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதில் பலரும் போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அவர்களின் கல்வி சான்றிதழ் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த குடியாத்தம் ஒன்றியம் மோர்தானா கிராம ஊராட்சி செயலாளர் விநாயகம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பரவகல் ஊராட்சி லோகநாதன், பாலூர் ஊராட்சி பாஸ்கரன், காட்பாடி ஒன்றியத்தில் புத்தூர் ஊராட்சி செயலாளர் ராஜா ஆகிய 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories:

More
>