சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகளில் தளர்வு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை புறநகர் ரயிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றை காண்பித்து ஆண்கள் எந்த நேரத்திலும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில்அத்தியாவசிய பணியாளர்கள்,  பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  

ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்து இருந்தநிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Stories:

>