×

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய மலபார் கோல்டு நிறுவனம்

டெல்லி : இதயநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நேர்மறை எண்ணங்களால் வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் தன்யா ஜோசின் மணப்பெண் விளம்பர வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 21 வயதான தன்யா ஜோசினுக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பது கனவு. கனடாவில் படித்து வந்த தன்யாவின் கனவை அவருக்கு வந்த இருதய செயல் இழப்பு நோய் கலைத்தது. அவரது இதயம் 20%மட்டுமே செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையிலும் துவண்டு போகாத தன்யா நம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றார்.

நேர்மறை எண்ணங்களுடன் தன்னுடைய புகைப்படங்களையும் தனது வாழ்வில் நிகழும் சிறப்பான தருணங்களையும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். கனடாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பியதன் தன்யாவின் கண்ணில் மலபார் ஜிவெல்லர்ஸின் மணப்பெண் விளம்பரம் தென்பட்டது. இதனை பார்த்தவுடன் தானும் இது போன்ற விளம்பரத்தில் தங்க நகைகள் அணிந்து நடிக்க விரும்புவதாகவும் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதனை மலபார் ஜிவெல்லர்ஸிக்கு டேக் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த மலபார் ஜிவெல்லரி போட்டோ ஷூட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

2021ம் ஆண்டுக்கான பிரைட் ஆப் இந்தியா என்ற விளம்பரத்தில் நடிக்கவும் தன்யாவுக்கு மலபார் ஜிவெல்லரி வாய்ப்பு அளித்தது. ஸ்பெஷல் பிரைட் ஆப் இந்தியா என்ற பெயரில் தன்யாவின் விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட நிலையில், இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்ததுதான் மலபார் ஜிவெல்லரிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. தன்யாவின் கனவை மலபார் ஜிவெல்லரி நிறைவேற்றி இருப்பதாக நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்/தன்னுடைய மண மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை எனக் கூறி இருக்கும் தன்யா, தனது கனவு நிறைவேறிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.   


Tags : Malabar Gold Company , தன்யா ஜோசின்
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!