நீலகிரியில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மதுபானம் விற்பனை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம் விற்பனை, தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட மக்கள் 97 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுபானம் வாங்க இரு டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்று காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதற்காக பல்வேறு முகாம்கள் நடந்துவரும் நிலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கச் செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையானது, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>