×

ஈரான் மாடலில் ஆப்கனில் அமையும் புதிய அரசு, அதிபர் யார்?; தலிபான்கள் அறிவிப்பு

காபூல் : ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் தாலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா பொறுப்பேற்பார் என்றும் விரைவில் புதிய அரசு அமையும் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து நாட்டோ மற்றும் அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிதை அடுத்து தாலிபான்கள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாக கொண்டாடி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஈரான் மாடலில் அரசை அமைக்கும் தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தாலிபான்களின் உயர்மட்ட குழு தலைவர் அதிபராக பொறுப்பேற்று அரசியல் மற்றும் மத ரீதியான விவரங்களுக்கு அவரே தலைவராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.அந்த பதவி தாலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.தாலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா பரதர் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.எந்த நேரத்திலும் பதவி ஏற்பு நிகழ்ச்சி அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாலிபான்களின் கொடி தயாரிப்புப் பணி மற்றும் புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 


Tags : Afghanistan ,Iran ,Taliban , ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...