×

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலை., முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!: அமைச்சர் மா.சுப்பிரமணியனின் அதிரடி அறிவிப்பு..!!

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்ததற்கு பின்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் 1000 சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புதிய அறிவிப்பு:

* இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* அரசு மருத்துவமனைகளில் ரூ.2.6 கோடி மதிப்பில் 40 டயாலிசிஸ் கருவிகள் வாங்கப்படும்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு.

* முதலமைச்சர் காப்பீடு திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 108 அவசரகால ஊர்திகள் சேவையை மேலும் மேம்படுத்த ரூ.69.18 கோடி மதிப்பில் கூடுதலாக 188 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்.

* 12 அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவ பட்டய படிப்புகள் ரூ.8.09 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* சென்னை மாநகராட்சியில் சஞ்சீவராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் 100 படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்படும்.

* 2015ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் நோக்கில் ரூ.7 கோடி செலவில் 10 ஊடுகதிர் வாகனங்கள் வழங்கப்படும்.

* 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ரூ.45 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும்.

* 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.35 கோடி செலவில் நிறுவப்படும்.

* சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.


Tags : Siddha Medical University ,Chennai ,Minister ,Ma Subramaniam , Chennai, Siddha Medical University, Medical Insurance Scheme, Ma. Subramanian
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...