கொடிய கொரோனா கொல்லுயிரியை கட்டுப்படுத்தும் பாம்பின் விஷம்!: பிரேசில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கன்டுபிடிப்பு..!!

பிரேசில்: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவதை பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் எந்த மாதிரியான வைரஸ் என்று உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. இதன் அறிகுறிகள் இதுதான் என்று உறுதியாகவும் திட்டமிட்டும் சொல்ல முடியவில்லை. இந்நிலையில் ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் கொடிய விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதை பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்ட குரங்கின் உடலில், பாம்பின் விஷம் செலுத்தி ஆய்வு செய்தபோது கொரோனா தொற்று பரவுவதை 75 சதவீதம் பாம்பின் விஷம் கட்டுப்படுத்துவதை கண்டறிந்து உள்ளனர். ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, இந்த பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு கொரோனா வைரசில் உள்ள முக்கிய புரதத்தை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். பாம்பின் கொடிய விஷத்திலுள்ள மூலக்கூறான பெப்டைட்-ஐ ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால் ஜரரகுசு பிட் வைபர் பாம்புகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தேவையில்லை என ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.

தற்போது முதல்கட்ட ஆய்வு நடந்துள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் அடுத்ததாக மூலக்கூறின் பல்வேறு அளவுகளின் செயல்திறனை மதிப்பீட்டு செய்து வருகின்றனர். இத்தனை நாள் இந்த வைரசுக்கு மருந்து கிடைக்காத நிலையில், இப்படி ஒரு மருந்தை தயாரிக்கும் முயற்சியானது பெருத்த சாதனையாகவே கருதப்படுகிறது.

Related Stories:

>