×

தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை : அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!!

சென்னை : தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.அப்போது சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானத்தின் மீது பேசிய ஜவாஹிருல்லா, கந்துவட்டி காரர்கள் போல் சுங்கச் சாவடிகள் வசூல் செய்வதாக குற்றம் சாட்டினார்.இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச் சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆனால் 48 சுங்கச் சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் பரனூர்,நெமிலி, சென்ன சமுத்திரம், சூரபட்டு உள்ளிட்ட 5 சுங்கச் சாவடிகளை அகற்ற விரைவில் ஒன்றிய அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் அமைச்சர் வேலு தெரிவித்தார்.   


Tags : Tamil Nadu ,Minister EV Velu , அமைச்சர் எ.வ.வேலு
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...