பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள்

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர் மீது புகார் வந்த போதே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதில் ஒரு வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு ஒன்று புதிதாக அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 5 வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா மீதான குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories:

>