×

ராஜபாளையம் பகுதியில் கடம்பன்குளம் கண்மாயில் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள்

ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தொடர்ந்து கட்டிட கழிவுகள் உள்ளிட்ட குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என வலியுறுத்தி வருகின்றனர்.

விளைநிலத்தில் முளைக்கின்ற ஒவ்வொரு விதைக்கும் மழையன்னை தருகின்ற மழைநீர் தான் தாய்ப்பாலாக உள்ளது. அருவியாக, நதியாக, ஓடையாக ஓடி வரும் மழைநீர், கண்மாய், குளம் போன்ற நீர்த்தேக்கங்களில் தேங்கி, கால்வாய்கள் வழியாக விளைநிலங்களுக்கு சென்று விவசாயத்திற்கு பயன்பட்டு நமக்கு நவதானியங்களை தருகின்றது.

இந்த மழைநீர் மண்ணிற்கு மட்டுமல்ல, மனித இனத்திற்கும் தாய்ப்பால் போன்றது தான் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், குளம், ஏரி, நீர்வரத்து கால்வாய் போன்ற நீர்நிலைகளில் தொடர்ந்து குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கட்டிட கழிவுகள் மற்றும் குப்பையை கடம்பன்குளம் கண்மாயில் தொடர்ந்து கொட்டி வருவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, கண்மாய் பகுதிகளை தூர்வாரி கரைப்பகுதி உயர்த்திடவும், கண்மாயில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Kadambankulam ,Rajapalayam , Rajapalayam, Building waste,water storage
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து