×
Saravana Stores

திருத்தங்கல்லில் குடோனில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகரில் பானுமதி என்பவருக்கு சொந்தமான குடோனை அதே பகுதியை சேர்ந்த ராமர், குருசாமி ஆகியோர் பட்டாசு உற்பத்திக்கு தேவையான குழாய் கம்பெனிக்காக வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இக்குடோனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிவகாசி டிஎஸ்பி பாபுபிரசாந்த், ரேஷன் பொருள் கடத்தல் தனிப்பிரிவு காளிதாஸ், முத்துமாரியப்பன், குழந்தைவேல், பறக்கும்படை தனி தாசில்தார் சங்கரபாண்டியன், வருவாய் ஆய்வாளர் விக்னேஷ்வரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

 அப்போது குடோனில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அரிசி- ேகாதுமை மூட்டைகளை பறிமுதல் செய்து வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருத்தங்கல் போலீசார் ராமர், குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kuton ,Budgal , Sivakasi, Thiruthankal, Rice, Wheat, Seized
× RELATED செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது