×

கொக்கிரகுளம் பகுதியில் கழிவுநீர் கலந்தநிலையில் மாசுபட்ட குடிநீர் விநியோகம்-தொற்று நோய் பரவும் அபாயம்

நெல்லை : நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் கைக்கு எட்டும் தொலைவில் தாமிரபணி இருந்தும் கழிவுநீர் கலந்தநிலையில் மாசுபட்ட குடிநீர் விநியோகம் ெசய்யப்படுவதால் கடும் அவதிக்கு உள்ளாகும் மக்கள் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.  நெல்லை மாநகராட்சி பகுதிக்கு சுத்தமல்லி கொண்டாநகரத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரும் வகையில் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. இதில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலும் திரளான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இப்பணியால் ஏற்கனவே பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்ததால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கொக்கிரகுளம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பல வீடுகளில் குடிநீர் வராதநிலை காணப்படுகிறது. தற்போது கொரோனா 2வதுஅலை பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியில் சென்று குடிநீர்  பிடிக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி மூலம் கடந்த வாரம் 4 லாரிகளில் குடிநீர் கொண்டு வந்து பொதுமக்களுக்கு விநியோகம் ெசய்யப்பட்டது. இருப்பினும் தற்போது கொக்கிரகுளம் பகுதியில் வீடுகள், தெருக்களில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாய்களில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் கழிவுநீர் கலந்தநிலையில் மாசுபட்டி வருவதாகவும், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக கைக்கு எட்டும் தொலைவில் தாமிரபரணி இருந்தும் கொக்கிரகுளம் பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். கொக்கிரகுளம் பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பதை கண்டறிந்து பழுதான குழாய்களை அகற்றி பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்….

The post கொக்கிரகுளம் பகுதியில் கழிவுநீர் கலந்தநிலையில் மாசுபட்ட குடிநீர் விநியோகம்-தொற்று நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kokkirakulam ,Kokkrakulam ,
× RELATED நெல்லை கைலாசநாதர் கோயிலுக்கு...