×

நிதி ஒதுக்கியும் தார் சாலை பணிகள் தொடங்காததால் மலை கிராம மக்கள் அவதி

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை

அணைக்கட்டு : அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட மூன்று மலை ஊராட்சிகள் உள்ளன. இதில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. அங்கு வசிப்பவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள பகுதிக்கு வரவும், வந்த பின்னர் மீண்டும் வீடு திரும்பவும் முத்துகுமரன் மலை அடிவாரத்தில் உள்ள மண்பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் ₹5.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் பணிகள் தொடங்கவில்லை. இதனால் பொதுமக்கள் இந்த கரடு முரடான பாதையிலே சென்று வருவதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைக்கு செல்லும் மண் பாதைகள் சரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மலை கிராம மக்கள் அடிவாரத்திற்கு வந்து செல்ல பெரும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை பீஞ்சமந்தை பகுதியை சேர்ந்த மலை கிராம மக்கள் வெள்ளிக்கிழமைகளில் ஒடுகத்தூரில் நடக்கும் காய்கறி வார சந்தகை்கு வந்து காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் மலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் மலைப்பாதையில் வண்டியின் டயர் மண்ணில் சிக்கி ஏற முடியாமல் திணறியது.

 பல முறை முயற்சித்தும் மினி வேன் மலையில் மீது செல்ல முடியாததால், வண்டியில் இருந்த பெண்கள் உள்பட அனைவரும் கிழே  இறங்கி அறை கிலோ மீட்டர் தூரம் வண்டியை தள்ளி சென்று, ஒரளவுக்கு  சரியான பாதையில் சென்றவுடன் அனைவரும் மினி வேனில் ஏறி தங்களது மகை கிராமத்திற்கு சென்றனர்.
தொடரும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொரம்பு மண் கொட்ட தடை செய்யாதீர்கள்


மழை பெய்து தற்போது மண்பாதைகள் பல இடங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. தார்சாலை அமைக்கும் வரை தற்காலிகமாக மொரம்பு மண்ணாவது கொட்டி பாதையை சீரைக்க வேண்டும் என மலை கிராம மக்கள் வன துறையினடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் மாவட்ட வன அதிகாரி அனுமதியளித்தால் தான் எதுவும் செய்வோம் என நிராகரித்து வருகின்றனர்.

இதனால் கிராம மக்கள் ஊரக வளர்ச்சி துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பிடிஓக்கள் நாங்கள் செய்ய வந்தால் வன துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால் அவர்கள் அனுமதித்தால் நாங்கள் செய்ய தயார் என கூறுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட அதிகாரிகள் சாலை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dar road , Anaikattu, Village People Suffering, Road Work
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...