×

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை - லண்டன் இடையே மீண்டும் நேரடி விமான சேவை!: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை - லண்டன் இடையே நேரடி பயணிகள் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று முதல் அலை காரணமாக கடந்த ஆண்டு பன்னாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா, பிரிட்டன் இடையே பயணிகள் விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியோடு நிறுத்தப்பட்டது. அதன்பின் இருநாட்டு அரசுகளுக்கு இடையே ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த அளவில் தான் விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து உள்பட சில நாடுகளில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்தது. இதையடுத்து லண்டனில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டும் விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது. ஆனால் சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்கவில்லை. இந்த நிலையில் இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து மீண்டும் சென்னை - லண்டன் இடையே நேரடி பயணிகள் விமான சேவையை தொடங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி லண்டனில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வாரத்தில்  புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் விமான சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து லண்டனுக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விமான சேவை இயக்கப்படும் எனவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Tags : Chennai ,London ,British Airways , Chennai - London, direct air service, British Airways
× RELATED முருகன் வழக்கு விசாரணை நீதிபதி விலகல்