×

அசாமில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் ராஜீவ் காந்தி பெயரை நீக்க அம்மாநில பாஜக அரசு முடிவு : காங்கிரஸ் கடும் கண்டனம்!!

டிஸ்பூர் : கேல் ரத்னா விருதில் ராஜீவ் காந்தி பெயரை நீக்கியதை தொடர்ந்து அசாமில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் ராஜீவ் காந்தி பெயரை நீக்க அம்மாநில பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது. அசாம் மாநில பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி ஓரங் தேசிய பூங்காவின் பெயரை ஓராங் தேசிய பூங்கா என மாற்றம் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் இதனை அறிவித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆதிவாசிகள் மற்றும் தேயிலை பழங்குடியினரின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்படுவதாக விளக்கம் அளித்தார்.

பூங்காவின் அருகில் வசிக்கும் ஓராங் என்ற பழங்குடியினர் ராஜீவ் காந்தி என்ற பெயரை நீக்க எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் தொடர்ந்து ராஜீவ் காந்தி பெயரை வரலாற்றில் இருந்து நீக்கும் முயற்சியில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. அண்மையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை தயான்சந்த் கேல் ரத்னா விருது என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : BJP government ,Rajiv Gandhi ,Assam ,Congress , தேசிய பூங்கா, ராஜீவ் காந்தி ,அசாம்
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...