×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றம் வருகை..!!

நீலகிரி: கோடநாடு வழக்கு விசாரணைக்கு ஆஜராக குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றம் வந்தனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கானது கடந்த 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்தது முதல் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. வழக்கை பொறுத்தமட்டில் இன்றைய தினம் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகிய இருவர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். தற்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராக சயான் உதகை நீதிமன்றம் வந்துள்ளார். குன்னூர் சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கேரளாவில் கொரோனா பரவலால் இன்று ஆஜராக மாட்டார்கள். உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இன்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், நாளை தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், நாளை மறுநாள் மின்வாரிய உதவி பொறியாளர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற உள்ளது.

Tags : Sayane ,savior ,yakkai , Kodanad, Saiyan, Walayar Manoj, Udhaya Court
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!