கேரளா, கர்நாடக மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதால், தமிழக கர்நாடக மாநிலங்கள் கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த 2 மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் நேற்றும் 30 ஆயிரத்து 803 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருந்தனர். மாநிலத்தில் தொற்று விகிதம் 20 சதவீதக்கும் மேல் நீடித்து வருகிறது. அங்கு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்த தயங்குவதே தொற்று அதிகரிக்க காரணம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமையில் இருக்கும் நிலையில், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இரு மாநில மருத்துவத்துறை அமைச்சர்களுடனும் தொலைபேசியில் பேசியிருந்தார். இதனையடுத்து, மாநிலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து, ஊரடங்கு அமல்படுத்த வேண்டியும், அதன்முடிவில், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்பாடுகள் மட்டுமன்றி கேரள எல்லையையொட்டிய தமிழக, கர்நாடக மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாநிலத்தில் 2 வாரங்களுக்குள் தொற்று கட்டுக்குள் வரும் என நிபுணர்களும் கூறியிருப்பதாக ஒன்றிய  அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>