உலக வங்கி நிதி உதவியுடன் மூன்றாவது முழுமை திட்டம்

சென்னை: நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பதாவது: சென்னை நகரப் பகுதிக்கான மூன்றாம் முழுமைத் திட்டத்தில், மூன்றாம் முழுமைத் திட்ட தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முழுமைத்திட்டம் மாற்றங்களை எதிர் கொள்ளக்கூடிய, அனைத்தையும் உள்ளடக்கிய இயல்புடையதாய், துடிப்பான பொருளாதாரம், எல்லா பிரிவினருக்குமான வீட்டுவசதி, பாதுகாப்பும் திறன்மிக்க போக்குவரத்து, போதுமான நீர் வழங்கல்,

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகளை அகற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மேம்பாடு, நீர்நிலைகள் மற்றும் சூழலியல் வளங்கள் பாதுகாப்பு, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் நெகிழ்திறன், காலநிலை தழுவல், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் இத்திட்டத்திற்கான தயாரிப்பு பணிகள், உலக வங்கி நிதி உதவியுடன் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

>