குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் புதிதாக கட்டப்பட்ட 20,056 வீடுகளில் ஒருவர் குடிபுக விரும்பவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

* மதுரை அருகே 2 ஆயிரம் குடியிருப்புகளும் காலியாகவே உள்ளது

ெசன்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழகத்தில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 446 குடிசைகள் இருப்பதை மாற்ற வேண்டும். 2030க்குள் படிப்படியாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படும். இந்த வாரியம் சார்பில் 366 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 360 அடுக்குமாடி வீடுகளை பராமரித்து வருகிறது. கடந்த 2017,2018,2019 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டும் கடந்த ஆட்சியில் 61 திட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 56 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில், ஒருவர் கூட அந்த வீடுகளுக்கு செல்லவில்லை. இதற்கு காரணம், அந்த வீடுகள் நகரங்களில் 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

2012ல் கட்டப்பட்ட 2 ஆயிரம் குடியிருப்பில் ஒரு ஆள் கூட செல்லவில்லை. கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் 1800 வீடுகள் கட்டப்பட்டன. இங்கு வர யாரும் வரவிரும்பவில்லை. காஞ்சிபுரம் கீழ்கதிர்ப்பூரில் 2612 வீடுகள் கட்டியுள்ளனர். வீடு கட்டி 4 ஆண்டுகளாகியும் ஒருவர் கூட வரவில்லை. இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாவட்ட கலெக்டரிடம் கூறி வேகவதி ஆற்றுப்படுகையை ஓட்டி உள்ள 1400 பேரை கண்டறிந்து அவர்களை அந்த குடியிருப்புக்கு செல்லுமாறு கூறினோம். ஆனால், அங்கு செல்ல மக்கள் மறுக்கின்றனர். ஏற்கனவே 3 அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தால் தற்போது 6 அடுக்குமாடியாக கட்டுகிறோம். 6 மாதத்தில் மட்டும் 7500 வீடுகள் புதுப்பிக்கப்படும்.

தரமற்ற வகையில் கட்டிய கே.பி.பார்க் டான்டி சிஸ்டம் ஒழிப்பு

சட்டப்பேரவையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

2017ல் டான்டி என்கிற சிஸ்டம்  ஒன்றை கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டப்படி  கான்ட்ராக்டர்களே டிசைன் போடுவார்கள். அவர்களே கட்டிடம் கட்டுவார்கள்.  அதில் கட்டியது தான் கே.பி.பார்க் குடியிருப்புகளும் ஒன்று. அவர்கள் பெரிய  அளவில் பணம் சம்பாதிக்க உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் முற்றிலும்  ஒழிக்கப்பட்டு பழைய நடைமுறை கொண்டு வரப்படும். உங்கள் தொகுதியில் முதல்வர்  திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஏழை எளியோர் வீடு கேட்டு 29,838  மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு வாரியம் சார்பில்  வீடுகள் வழங்கப்படும்.

சென்னை, நெல்லையில் போதை தடுப்பு மையங்கள்

சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:   சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் சிறுவர்களிடையே போதை பழக்கம்  அதிகரித்து காணப்படுவதால், அவர்களை அப்போதை பழக்கத்தில் இருந்து மீட்டு,  நன் மக்களாக சமுதாயத்தில் உயர்த்திடும் பொருட்டு சென்னை, திருநெல்வேலி  மாவட்டங்களில் போதை தடுப்பு மையங்கள் ரூ.76  லட்சம் செலவில்  செயல்படுத்தப்படும்.

*  குழந்தைகளை நிறுவனங்களில் வைத்து பராமரிப்பதற்கு மாற்றாக, குடும்பங்களில்  வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவுத் திட்டத்தின்  காத்திருப்பு பட்டியலில் உள்ள 1148 குழந்தைகளுக்கு மாதம் தோறும் ஒரு  குழந்தைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அரசின் முழு  பங்களிப்புடன் நிதியுதவி வழங்கப்படும்.

* யூனிசெப் நிறுவனத்துடன்  இணைந்து தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு பயிற்சி மையம் சமூகப்  பாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படும்.

Related Stories:

More
>