விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் செல்ல பிரேமலதாவுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில்  சிகிச்சைக்காக துபாய்  சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல உள்ளார். அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருந்தும் அவர் மீது திருநெல்வேலி காவல் துறையால் 2017ம் ஆண்டு தொடப்பட்ட குற்றவழக்கு மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி பாஸ்போர்ட் அதிகாரி அந்த பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டு திரும்ப பெற்றுக்கொண்டார். இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு நடந்தது. பிரேமலதா சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் கணவர் விஜயகாந்தின் சிகிச்சையின் போது உடனிருந்து உதவ வேண்டும். எனவே பாஸ்போர்ட்டை திரும்ப தருமாறு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Related Stories:

More
>