காந்தி, நேரு பற்றி அவதூறு நடிகை மீது வழக்கு

சென்னை: மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து நடிகை பாயல் ரோஹத்கி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவர் பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை பாயல் மீது புனே நகர போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, பாயல் ரோஹத்கி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>