மலையாள இயக்குனர் கே.பி.பிள்ளை காலமானார்

சென்னை: பழம்பெரும் மலையாள பட இயக்குனர் கே.பி.பிள்ளை. 1970 மற்றும் 1980 காலகட்டங்களில் புகழின் உச்சியில் இருந்தவர். இந்திய விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு நாடங்களில் நடித்து, இயக்கி பின்னர் சினிமா இயக்குனர் ஆனவர். சாகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஷ்டமுடி கயல், பிருந்தாவனம், நகரம் சாகரம், பாதிரா சூரியன், பிரியசகி, பணிதீரா வீடு உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

91 வயதான கே.பி.பிள்ளை தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>