×

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் மு.க.ஸ்டாலின்: சிரஞ்சீவி பாராட்டு

சென்னை: தொலைநோக்கு பார்வையும் அர்ப்பணிப்பும் கொண்ட மக்கள் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என நடிகர் சிரஞ்சீவி பாராட்டு தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் தனது டிவிட்டரில் சிரஞ்சீவி வெளியிட்ட பதிவில், ‘சிறப்பான பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தினேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

பல நன்மையான முன்முயற்சிகள் மூலம் அவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். கட்சி பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்து செல்கிறார். தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு குணத்தால் மக்களின் தலைவராக இருக்கிறார். கொரோனா சூழ்நிலையில் திறமையான நிர்வாகத்தை தந்து சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,Chiranjeevi , Visionary leader MK Stalin: Chiranjeevi praised
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...