480 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஐசிஎப்.பில் தயாரிப்பு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் 480 வந்தே பாரத் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப் ரயில் 18 திட்டத்தில் மோட்டாரில் இயங்கும் முதல் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. ஐ.சி.எப் மற்றும் பிற மாநில தொழிற்சாலைகளில் 58 ரயில்களுக்கான 928 பெட்டிகள் தயாரிக்க வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதில் ஐ.சி.எப்.பில் மட்டும் 30 ரயில்களுக்கான 480 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.5,800 கோடியில் இந்த பணிகளை 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இப்பெட்டிகளின் தயாரிப்புக்கான வடிவமைப்பு, சோதனை ஓட்டம், பராமரிப்பு பணிகள், தளவாடங்கள், உதிரி பாகங்கள் வாங்க ஐ.சி.எப் சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories:

>