×

இணையவழியில் வாடகை வீட்டு வசதி 19,558 வீடுகளை விற்க தனிப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பதாவது: 5,450 அலகுகளுக்கு முழுத் தொகை செலுத்தப்பட்டிருந்தும், பல்வேறு காரணங்களால் விற்பனை பத்திரம் வழங்கப்படவில்லை. மீதமுள்ள அலகுகளுக்கு முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஒரு சிறப்பு ஏற்பாடு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 11,497 மனைகள், 8,061 குடியிருப்புகள் உள்ளடக்கிய 19,558 அலகுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த அலகுகளின் விற்பனை மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிதிநிலை எதிர்காலத்தில் உயரும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள விற்பனையாகாத அலகுகளை விற்பதற்கு ஒரு விற்பனைப் பிரிவு வருங்காலத்தில் உருவாக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக சேவைகளின் விரிவான தொகுப்பு உருவாக்கப்படும். தவிர விண்ணப்பதாரர்கள் மற்றும் ஒதுக்கீட்டாளர்கள் நலனுக்காக இணையவழி விண்ணப்பம், ஒதுக்கீடு, கட்டணம் போன்றவற்றை செயல்படுத்த விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் முறை இணைய வழியில் உருவாக்கப்படும். வாடகை வீட்டுவசதிகளை நிர்வகிப்பதற்காக, விண்ணப்பதாரர்களுக்கு இணையவழி விண்ணப்பங்கள், உடனடி மற்றும் வெளிப்படையான ஒதுக்கீடு வழங்க ஒரு இணையவழி வாடகை வீட்டு வசதி ஒதுக்கீடு முறை உருவாக்கப்படும்.

Tags : Online rental facility Facility to sell 19,558 houses
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...