பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகார்: நடிகர் ஆர்யா மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யா மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்ட புகாரில் ஏற்கனவே இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், நடிகர் ஆர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடிகர் ஆர்யாவைப் போல் சமூக வலைதளங்களில் பேசி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்துள்ள இரண்டு பேரை சமீபத்தில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் ஆர்யாவிற்குத் தொடர்பில்லை எனக் கூறி சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நடிகர் ஆர்யா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: