நிலத்தடி சுரங்கத்தில் பணியாற்றும் முதல் பெண் சுரங்கப் பொறியாளருக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வாழ்த்து

சென்னை : சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தின் முதல் பெண் சுரங்கப் பொறியாளர் திருமிகு. அகன்ஷா குமாரிக்கு  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தின் வடக்கு கரன்புரா பகுதியில்  சுரி என்ற இடத்தில் உள்ள நிலத்தடிச் சுரங்கத்தில் பணியாற்றும் முதல் பெண் சுரங்கப் பொறியாளர் ஆனதற்காக, அகன்ஷா குமாரிக்கு மத்திய அமைச்சர் சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகன்ஷா குமாரியின்  சாதனை, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும், முற்போக்கான நிர்வாகத்துக்கு உண்மையான உதாரணம் எனவும், நிலத்தடி நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களை அனுமதிப்பதன் மூலம், பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசு அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது எனவும் மத்திய அமைச்சர் திரு ஜோஷி கூறினார்.

அகன்ஷா குமாரி, ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  இது சுரங்கப்பகுதி என்பதால், நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளை, அவர் சிறுவயது முதலே மிக அருகில் பார்வையிட்டுள்ளார். அது  அவரை தன்பாத் சிந்ரியில் உள்ள பிர்ஷா தொழில்நுட்பக் கழகத்தில் சுரங்கப் பொறியில் படிப்பைத் தேர்வு செய்ய வழிவகுத்தது.

‘நிலக்கரி இந்தியா’ நிறுவனத்தில் சேரும் முன், ராஜஸ்தானில் இந்துஸ்தான் துத்தநாகம் நிறுவனத்தின் பலாரியா சுரங்கத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். நிலக்கரி இந்தியா நிறுவனத்தில், இணைந்ததன் மூலம், தனது சிறுவயதுக் கனவு நனவானது என அகன்ஷா குமாரி கூறினார்.

Related Stories:

>