×

இனி சீனக் குழந்தைகள் வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும் : சீன அரசு அதிரடி!!

பெய்ஜிங்: இனி சீனக் குழந்தைகள் வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.சமீபகாலமாக குழந்தைகள் அதிகளவில் ஸ்மார்ட்போன்களில் வீடியோ கேம்களில் தங்களது நேரத்தை செலவிட்டு அதற்கு அடிமையாகி வருகின்றனர். தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை இளைஞர்கள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இன்று (செப்., 1) முதல் சீனாவில் வீடியோ கேம்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சீனா நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதிகளின்படி,

*சீனக் குழந்தைகள் இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும்.

*18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

*புதிய சட்டத்தின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்குக் குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும்.

*தேசிய விடுமுறை நாட்களில் இதே நேரத்தில் விளையாடலாம்.

*புதிய விதியின்படி 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர், விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாடு பதிவு செய்துகொள்ள முடியும்.

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் வரவேற்பும் எதிர்ப்பும் வழக்கம் போல் கிளம்பியுள்ளது.

Tags : சீனக் குழந்தைகள்
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...