ஊரடங்கில் உலகப் பணக்காரர்களின் அபார வளர்ச்சி... கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 829% உயர்வு!!

மும்பை : சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய கொரோனா உலக பணக்காரர்களின் வளர்ச்சிக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. கடந்த 1.5 ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெஃப் பெசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 66% உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 829%வளர்ச்சி கண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழில் அதிபர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள விவரங்களை அமெரிக்க வணிக இதழான ப்ளூம்பர்க்வெளியிட்டுள்ளது. இதன்படி, அதானி குழுமத் தலைவரான குஜராத்தைச் சேர்ந்த கெளதம் அதானியின் சொத்துக்கள் கடந்த நிதியாண்டில் மட்டும் 829% வளர்ச்சி கண்டுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்தில் இருக்கும் இவர் ரூ.4.74 லட்சம் கோடி சொத்துக்களை கொண்டுள்ளார்.கொரோனா காலத்தில் உலகின் நம்பர் 1 பணக்காரரான ஜெஃப் பெசோஸ்-ன் சொத்துக்களே 66% மட்டுமே வளர்ச்சி அடைந்த நிலையில், அதானியின் சொத்து வளர்ச்சி உலக தொழில் அதிபர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இதே போல் பணக்காரர்கள் பட்டியலில் 12ம் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா காலத்தில் 115% உயர்ந்து ரூ. 6.27 லட்சம் கோடியாக உள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு கடந்த 2020 ஏப்ரல் முதல் 66% உயர்ந்து ரூ.14.15 லட்சம் கோடியாக உள்ளது. உலகின் 2வது பெரிய பணக்காரரான டெஸ்லா தலைவர் எலன் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த 1.5 ஆண்டுகளில் விறுவிறு ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 547% உயர்ந்த அவரது சொத்து மதிப்பு ரூ.14.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  

Related Stories:

>