×

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, கல்வி கடன் ரத்து, பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 : அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!!

புதுச்சேரி : புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டு கழகம் மூலம் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பேசியது பின்வருமாறு

*புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு தொடர்ந்து வற்புறுத்தப்போகிறோம்.

*பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 ஆக வழங்கப்படும்.

*சுகாதாரத்துறையில் 100 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்,

*புதுச்சேரியில் அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10,000 வழங்கப்படும்.

*புதுச்சேரியில் வவுச்சர் ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* புதுச்சேரிக்கு மேலும் ரூ.500 கோடி கூடுதல் நிதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

*பாசிக், பாஸ்ப்கோ நிறுவனங்களை மீண்டும் சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

*நடப்பு நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக வழங்கப்படும்.

*புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.9000ல் இருந்து ரூ.10,000  ஆக உயர்த்தி வழங்கப்படும்.

*புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : CM , முதல்வர் ரங்கசாமி
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!