×

களியக்காவிளையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை :  குமரி வழியாக கேரளாவுக்கு நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 26.7 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 லாரிகள் போலீசார் சோதனையில் பிடிபட்டது. போலீசார் அரிசியை பறிமுதல் செய்து டிரைவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.  குமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்ஐ முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் குழித்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் ரேஷன் அரிசி மூடைகள் மற்ற அரிசி லோடுடன் கலந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. தொடர் சோதனையில் மொத்தம் 15.7 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனர் வியன்னூரை சேர்ந்த ராஜேஷ்குமார்(30), கிளீனர் பள்ளியாடியை சேர்ந்த சுனில்குமார்(39 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு ஆலையில் இருந்து அரிசியை ஏற்றி விட்டதாகவும், நெய்யாற்றின்கரையில் இறக்க கூறியதாகவும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை எஸ்ஐ சிந்தாமணி தலைமையிலான போலீசார் களியக்காவிளை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி மூடைகள் மற்ற அரிசி மூட்டைகளுடன் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 11 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது.

இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் அண்டுகோடை சேர்ந்த அனீஸ்(26) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், திருநெல்வேலியில் உள்ள ஒரு ஆலையில் இருந்து அரிசியை ஏற்றிவிட்டதாவும், கேரளாவில் ஒரு குடோனில் இறக்குமாறு சொன்னதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் இரு லாரிகளில்இருந்தும்  பிடிபட்ட அரிசியை காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து லாரியில் அரிசியை கடத்திய கும்பல் யார்? எந்த குடோனில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 26.7 டன் ரேஷன் அரிசி லாரிகளில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kerala , Kaliyakkavilai, Kerala, Ration Shop, Ration rice seized
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...