டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் பள்ளிகள் இன்று திறப்பு : வகுப்பறைக்குள் மாணவர்கள் உற்சாகம்!!

டெல்லி : டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களிலும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கொரோனா 2ம் அலை தீவிரம் குறைந்து வரும் சூழலில், பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளை திறந்துள்ளன.தலைநகர் டெல்லியில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, டெல்லியில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் செயல்பட தொடங்கியது. முதற்கட்டமாக 9 -12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கின.

டெல்லியில் காலை முதல் மழை பெய்து வந்தாலும் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் 9 -12ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1 முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன.பள்ளி திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி போன்றவற்றை பயன்படுத்திய பின், மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

Related Stories:

>