×

ஆப்கனில் இருந்து வெளியேறிய முடிவிற்கு நானே பொறுப்பு.. 20 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வர இதுவே தருணம் : அதிபர் ஜோபிடன் உரை!!

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா முன்கூட்டியே வெளியேறி இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமெரிக்க அதிபர் ஜோபிடன், ஆப்கன் விவகாரத்தில் தானே முழு பொறுப்பை ஏற்பதாக தெரிவித்தார். ஆப்கனில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க படை முற்றிலுமாக வெளியேறிதற்கான அறிவிப்பை ஜோபிடன் வெள்ளை மாளிகையில் நேற்று முறையாக அறிவித்தார். முன்னதாக கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வெளியேறியதால் அமெரிக்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் முன்கூட்டியே காபூலில் இருந்து வெளியேறி இருந்தால், பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்றும் குடியரசு கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.

இதற்கு பதில் அளித்த ஜோபிடன், மீட்புப் பணிகள் முழுமையாக வெற்றி அடைந்து இருப்பதாகவும் போரை நீட்டிப்பதற்கு பதிலாக அதனை முடிவுக்கு கொண்டு வர விரும்பியதாகவும் அதற்கு இதுதான் சரியான தருணம் என்றும் தெரிவித்தார்.ஒரு வேளை எதிர்க்கட்சிகள் சொல்வது போல ஜூன் மாதத்திலேயே ஆப்கனில் இருந்து வெளியேற முடிவு எடுத்து இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டு இருப்பர். நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும் என்று ஜோபிடன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஆப்கனில் இருந்து வெளியேறுவது என்று எடுத்த முடிவுக்கு நானே பொறுப்பு.சிலர் முன்கூட்டியே வெளியேறி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை நான் ஏற்கவில்லை.ஒரு போர் முடிவுக்கு வரும் தருணத்தில் பல சிக்கல்கள், சவால்கள், அச்சுறுத்தல்கள் இருக்கும்.இதையெல்லாம் சந்திக்காமல் அங்கிருந்து வெளியேற முடியாது, என்றார்.


Tags : Afghanistan ,20 year war ,President ,Jobitan , ஜோபிடன்
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி