×

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கிவைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்லூரி மாணவர்கள் சேர்க்கையின் போது கல்லூரி முதல்வர் அவர்களால் மாணவர்களுக்கு விதிமுறைகள் சொல்லித்தரப்பட்டு அதற்கான பிரிண்ட் அவுட்டும் தரப்பட்டிருக்கிறது. அட்மிஷன் முடித்து கல்லூரிக்கு வருகின்ற போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கான ஆவணங்களை சமர்பித்துவிட்டு வகுப்பறைக்கு வர வேண்டும் என்கின்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடுமட்டுமின்றி வகுப்புக்கு வருகின்ற மாணவர்கள் யாரேனும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் ஒவ்வொருக்கு இருக்கைக்கும் இடைவெளி விட்டு மாணவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்லும் போது சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பொறுத்தவரை 1450 கல்லூரிகள் இருக்கின்றன.

ஏறக்குறைய 10 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை 587 உள்ளன. இதில் 4.25 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், மருத்துவ மாணவர்கள், பாலிடெக்னீக் மாணவர்கள் என ஏறத்தாழ 19 லட்சம் மாணவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்ற பணியினை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் ஆய்வு செய்யவிருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Tags : Minister ,Ma Subramanian , Corona Vaccine, College, Minister Ma. Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...