புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ ஆணைக்கிணங்க திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டர்சன்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் செஞ்சி ஜெ.ஜவகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், வி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 2ம் தேதி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: