×

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதி அரசு பள்ளிகளில் சீரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று முதல் தமிழகத்தில் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சீரமைக்கும் பணியினை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்செடிகளை அகற்றி சீர்செய்யும் பணி, வகுப்பறை, குடிநீர் தொட்டி, ஆய்வகம், சத்துணவு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, ஒவ்வொரு வகுப்பறைக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் வகுப்பறைகளை தூய்மையாக பராமரிக்க பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை செய்து பள்ளியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் பள்ளி மைதானம் ஆகியவைகளை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்செடிகளை அகற்றி சீர்செய்வதையும் வகுப்பறை, குடிநீர் தொட்டி, ஆய்வகம், சத்துணவு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, அவர் ஒவ்வொரு வகுப்பறைக்கும் நேரடியாக சென்று பார்வையிட்ட பின் வகுப்பறைகளை தூய்மையாக பராமரிக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை செய்து பள்ளியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags : Tiruvallur ,Uthukkottai , Reconstruction work in Tiruvallur, Uthukkottai area government schools: Collector inspection
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...