×

66வது ஆண்டில் எல்ஐசி நிறுவனம்

சென்னை: எல்ஐசி நிறுவனம், இன்று முதல் 66வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த நிதியாண்டில் 229.15 லட்சம் கோரிக்கைகளில் ரூ.1,47,754 கோடியை செட்டில்மென்ட் செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, வர்த்தக போட்டிகளுக்கு இடையிலும் இன்னும் முதலிடத்தில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் இத்துறையில் நுழைந்த பிறகும், முதலாண்டு பிரீமியம் வருவாயில் 66.18 சதவீதமும், பாலிசி எண்ணிக்கையில் 74.58 சதவீதமும்  சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த 1956ம் ஆண்டு ரூ.5 கோடி மூலதனத்துடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது ரூ.38,04,610 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 200-21 நிதியாண்டில் 2.1 கோடி புதிய பாலிசிகளை விற்று 3.48 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன்மூலம் கடந்த மார்ச் 31ம் தேதிப்படி, பிரீமியம் வசூலாக ரூ.1.84 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. பென்ஷன் மற்றும் குரூப் சூப்பர் ஆனுவேஷன் வர்த்தகத்தில் தொடர்ந்து 2வது ஆண்டாக ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை தாண்டி, ரூ.1,27,769 கோடியை பிரீமியமாக ஈட்டியுள்ளது. 8 மண்டலங்கள், 113 கோட்ட அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் மையங்கள், 2,048 கிளை அலுவலகங்கள், 1,546 சாட்டிலைட் அலுவலகங்களை கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

13.53 லட்சம் ஏஜென்ட்கள் உள்ளனர். இதுதவிர, 8 பொதுத்துறை வங்கிள், 6 தனியார் வங்கிகள், 13 வட்டார ஊரக வங்கிகள், 41 கூட்டுறவு வங்கிகள், ஒரு வெளிநாட்டு வங்கி ஆகியவற்றுடனும் இணைந்து செயல்படுகிறது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை ரூ.36,76,170 கோடியை முதலீடு செய்துள்ளது. 65 ஆண்டு பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்த இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் 229.15 லட்சம் கோரிக்கைகளில் ரூ.1,47,754 கோடியை செட்டில்மென்ட் செய்துள்ளது என இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : LIC in its 66th year
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...