கே.டி.ராகவன் வீடியோ குறித்து குழு விசாரித்து நடவடிக்கை: புதுவையில் பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

புதுச்சேரி: கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ குறித்து குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: கே.டி.ராகவன் பெயரில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதற்கு ஒரு குழு போட்டுள்ளோம். அந்த குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அந்த பத்திரிகையாளர் எதற்கு என்னை சந்தித்தார். அப்போது நான் என்ன பேசினேன் என்று அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது.

அவர் முறைப்படி அந்த வீடியோ டேப்பை என்னிடம் கொடுத்திருந்தால் கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருப்போம். அவர் அந்த வீடியோவை கொடுக்க ஆர்வமில்லாமல் வெளியிட்டுள்ளார். நான் வெளியிட்ட அறிக்கைக்கும், பத்திரிகையாளர் வீடியோவிலும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. மேலும், பத்திரிகையாளரின் முதல் வீடியோவில் கட்சியை சார்ந்தும், நிர்வாகிகளை சார்ந்தும், பெண் நிர்வாகிகள் சார்ந்தும் சில விஷயங்கள் பேசியுள்ளார். அது சம்பந்தமாக குழு அமைத்து, அதற்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். அக்குழு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>