தொடர்ச்சியாக 25 கடைகளில் கைவரிசை: கொள்ளையன் கைது: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் கடந்த 24ம் தேதி நள்ளிரவு  10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே இரவு சாலிகிராமம் பகுதியில் சினிமா தயாரிப்பாளர் மகளின் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 3 கடைகளிலும் கொள்ளை நடைபெற்றது.  

போலீசார் விசாரணை யில், பழைய குற்றவாளியான புளியந்தோப்பு பட்டாளம் கண்ணையா முதலியார் தோட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் விஜி (எ) இட்டா விஜய் (26) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பிரவோ (எ) சூரியபிரகாஷ் (21) என தெரியவந்தது.

அவர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.  விசாரணையில், இவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக 25 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது.

Related Stories:

More