×

மனநலம் பாதித்தவர்கள் குணமடைந்து நடத்தும் ‘பேக்கரி’மூலம் வருவாய்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தகவல்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம அரசு மனநல மருத்துவமனையில், ஆண்கள், பெண்கள் என 900க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல்வேறு வகையான மன நல பிரச்னைகளால் சிகிச்சைப் பெறுபவர்களில், பெரும்பாலானோர் குணமடைந்த பின்னர் வீடு திரும்புகின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்ட சிலர் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை கற்றுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மனநல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 5 பெண்கள், 2 ஆண்கள் ஹாட் பிரெட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் ‘பேக்கரி’ நடத்தி வருகின்றனர்.

நேற்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு பாராட்டினார். மேலும் இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகா கூறுகையில்: மனநல பாதிப்பில் இருந்து குணமடைந்தாலும், உறவினர்களாக கைவிடப்பட்டவர்களுக்கு சொந்த காலில் நிற்பதற்காக பல்வேறு தொழிற்பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் தங்கி பணிகளை செய்து வருகின்றனர். கடந்த மாதம் கூட்ட இரண்டு திருநங்கைகள் மருத்துவமனையில் டெலிபோன் ஆபரேட்டராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kilpauk Government Hospital Information , Revenue from ‘Bakery’ run by mentally ill people recovering: Kilpauk Government Hospital Information
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...