×

தொழில்நுட்ப கல்லூரிகளில் 2ம் பருவ தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக இரண்டாம், நான்காம், ஆறாம் மற்றும் எட்டாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் இத்தேர்வுகள் நடத்தப்பட்டது.

மொத்தம் 2,96,886 மாணவர்களில் 2,71,636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.49 ஆகும். 24,968  மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.  மேலும், 282 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags : Release of 2nd term examination results in technical colleges
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...