பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா நாளை துவக்கம்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். சதுர்த்தி விழாவில் ஒவ்வொரு வருடமும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டிற்கான சதுர்த்தி விழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இது குறித்து கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கூறுகையில், ‘தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சதுர்த்தி விழா கொடியேற்றத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சதுர்த்தி விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளான 6ம் நாள் நடைபெறும் கஜமுக சூரசம்ஹாரம், 9ம் நாள் நடைபெறும் தேரோட்டம், திருவீதி உலா நடைபெறாது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். குழந்தைகள், வயதானவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

More
>