×

காயம் காரணமாக 4வது டெஸ்டில் ஜடேஜா விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 2ஆம் நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது ஜடேஜாவின் வலது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்த காயத்தை பொருட்படுத்தாமல் ஜடேஜா நான்காவது நாள் போட்டி முடியும் வரை தொடர்ந்து விளையாடினார். இதனால் காயம் சற்று அதிகமானதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மூட்டுப் பகுதியை ஸ்கேன் செய்வதற்காக ஜடேஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா விளையாட முடியாத நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Jadeja , Injury, 4th Test, Jadeja, doubt
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு