×

தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்க ஆப்கனை பயன்படுத்தக்கூடாது : ஐ.நா. தீர்மானத்திற்கு 13 நாடுகள் ஆதரவு; ரஷியா, சீனா புறக்கணிப்பு!!

நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினரை பாதுகாப்புடன் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று ஆப்கன் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது. இதன்படி இந்திய தலைமையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா, எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கவும் ஆப்கன் மண்ணை யாரும் பயன்படுத்தக் கூடாது, என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆப்கனில் இருந்து வெளியேற விரும்புவர்களை செல்ல வழி ஏற்படுத்தப்படும் என்று தாலிபான்கள் கடந்த 27ம் தேதி தெரிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.ஆப்கனில் உள்ள பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 13 நாடுகளின் ஆதரவுகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ் வரதன், ஆப்கன் மண்ணை எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடாது என்றும் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் புகலிடம் கொடுக்கவோ கூடாது என்றும் வலியுறுத்தினார்.

Tags : Afghanistan ,UN ,Russia ,China , ஆப்கானிஸ்தானி
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது