ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 9 மாவட்ட ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

காஞ்சிபுரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பருக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசியில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்களையும் நடத்தி முடித்துள்ளது. அதை தொடர்ந்து தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை கொண்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த வாக்காளர் பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

எந்த நேரத்தில் தேர்தல் அறிவித்தாலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தெரிவித்தார். இதேபோல கள்ளகுறிச்சி, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், செங்கல்பட்டில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>