சாலை விபத்தில் சிக்கி ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் உயிரிழந்ததற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: சாலை விபத்தில் ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உயிரிழந்ததற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலை விபத்தில் சிக்கி கருணாசாகர் உயிரிழந்தது அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் எம்.எல்.ஏ. பிரகாஷ், அவரது குடும்பத்தினர்,  உறவினர்கள், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கோரமங்களா பகுதியில் உள்ள சகோதரர் மற்றும் உறவினர் வீட்டிற்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினரின் மகன் கருணாசாகர் நண்பர்களுடன் காரில் சென்றார். சொகுசு காரானது கோரமங்களாவில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் உள்ள தடுப்பு கம்பிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணாசாகர் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்நிலையில், சாலை விபத்தில் ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உயிரிழந்ததற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More