×

அண்ணாமலை பல்கலையுடன் ஜெ.பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட ஒபிஎஸ் உள்பட எம்எல்ஏ.க்கள் கைது

சென்னை: அண்ணாமலை பல்கலையுடன் ஜெ.பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். ஜெ.பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் மசோதவை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விழுப்புரத்தில் அமைந்திருக்ககூடிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருக்ககூடிய பல்கலை கழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அப்போதே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பழகன் அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது அந்த சட்டத்திருத்த மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இன்று முதல் கேள்வி நேரத்துடன் சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. கேள்வி நேரத்திற்கு பின் பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த வகையிலிருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறினார். ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.

அதிமுக எம்எல்ஏ.க்கள் கைது:

அதிமுக எம்எல்ஏ.க்கள் கலைவாணர் அரங்கம் எதிரே வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட ஒபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்த எம்எல்ஏக்கள் அனைவரையும் போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.


Tags : J.J. ,Annalayan University ,MLA ,OBS , Annamalai, J. University, merger, protest, OBS, arrest
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...