சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகத்தை வெளிக்கொண்டு வர வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள்

சென்னை:ஒன்றிய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். இதற்காக நேற்று காலை தொலைக்காட்சி நிலையம் வந்த அவரை பொதிகை தொலைக்காட்சி துணை தலைமை இயக்குனர் கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் சையது ரபீக் பாஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.  தொடர்ந்து, நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ‘‘சுதந்திர போரில் அதிகம் அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம் ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, அகில இந்திய வானொலி மற்றும் சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் அவர் மரக்கன்று நட்டார். இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு,  சென்னை பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>