×

வீராங்கனை அவனி புதிய வரலாற்றை எழுதியுள்ளார்: ஆளுநர் பாராட்டு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட  அறிக்கை: பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்ததன் மூலம்  அவனி லெகரா புதிய வரலாற்றை எழுதியுள்ளார். சுமித் அன்டில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திரா ஜஜாரியா மூன்றாவது பாரா ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர்கள் தங்கள் குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். வருங்காலங்களில் பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.


Tags : Veerangana Avani , Veerangana Avani, Governor, Praise
× RELATED 20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை...